பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் - ஆசிரியை இடையே நடந்த பாலியல் உறவு ... வீடியோ எடுத்த கிராம மக்கள்

By Petchi Avudaiappan Apr 24, 2022 12:06 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

உத்தரபிரதேசத்தில் பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் - ஆசிரியர் இடையே நடந்த பாலியல் உறவை கிராம மக்கள் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேசத்தின் சட்டிஸ்கர் பகுதியிலுள்ள பள்ளியொன்றின் தலைமையாசிரியர், அதே பள்ளியில் பணி புரியும் ஆசிரியை ஒருவரோடு பள்ளி ஸ்டோர் ரூமில் வைத்து பாலியல் உறவு கொண்டதை அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வீடியோயெடுத்து  அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனிடையே வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பலரும் ஆசிரியர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சிலர் அந்த வீடியோவை வைத்து தலைமையாசிரியரிடம் பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளியின் அந்த இடத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்து, அதை அறியவே நாங்கள் வீடியோ எடுத்தோம் என கிராம மக்கள் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. 

அதேசமயம் ஏற்கனவே பள்ளி முதல்வரை இதுதொடர்பாக எச்சரித்ததாகவும், தலைமையாசிரியரிடம் `இதுபோன்ற தவறான செய்கைகளில் ஈடுபடாதீர்கள் என கேட்டுக்கொண்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.