திடீரென அழைப்பு.. ரோபோ சங்கருக்கு பரிசாக கிடைத்த கமல்ஹாசனின் முத்தம்!
கமல் ஹாசன் ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ரோபோ சங்கர்
சின்னத்திரை டூ வெள்ளித்திரை பிரபலமாக மாறி இருக்கும் நடிகர் ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு? நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
நடிகர் விஜயகாந்த் போல் பேசி, நடனம் ஆடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது வெள்ளித்திரை பிளஸ் சின்னத்திரை இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கமல் ரசிகர்
திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் , குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ரோபோ, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார்.
Adorable? Robo Shankar's fanboy moment with #Ulaganayagan #KamalHaasan. pic.twitter.com/LdxWfcYIhI
— Kaushik LM (@LMKMovieManiac) June 16, 2022
ரோபோ ஷங்கர் தீவிரமான நடிகர் கமல் ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர் தன்னை கமல்ஹாசன் பக்தன் என்றே கூறி கொள்வார்.
திடீரென்று அழைப்பு
அவர் படங்களை பார்த்து தான் சினிமா மீது ஆசை வந்ததாக பல இடங்களில் ரோபோ பதிவு செய்துள்ளார். அதுமட்டுமில்லை கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அவரின் இல்லத்திற்கு சென்று அவரிடம் ஆசி வாங்குவார்.
சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று கற்பூரம் ஏற்றி தியேட்டரில் அதகளம் செய்தார்.
அன்பு முத்தம்
இந்நிலையில் ரோபோ ஷங்கருக்கு திடீரென்று கமல்ஹாசனிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. பதறி போனவர் சந்தோஷம் கலந்த பயத்தில் சென்னை ஆழ்வார்ப்பேட்டைக்கு சென்றுள்ளார்.
அப்போது கமல்ஹாசன் அவரை அழைத்து பேசி நலம் விசாரித்து இருக்கிறார். சந்திப்பின் இறுதியில் கமலின் பக்தர், ரோபோவுக்கு அன்பு முத்தத்தை பரிசாக தந்துள்ளார் உலகநாயகன்.
போன் கூட பண்ண மாட்டாங்க..வருஷத்தில் ஒரு முறைதான் பேசுவேன் - மனம் திறந்த மிஸ்கின்!