சர்வைவர் நிகழ்ச்சியில் என்னை நன்றாக வழிநடத்துனீங்க அர்ஜுன் சார்... - இந்திரஜாவின் முதல் பதிவு
சர்வைவர் நிகழ்ச்சியில் என்னை நன்றாக வழிநடத்துனீங்க அர்ஜுன் சார் என்று எலிமினேட் ஆன ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
உலகம் முழுக்க சர்வைவர் நிகழ்ச்சி ஹிட் அடித்துள்ளது. விக்ராந்த், இந்திரஜா, லட்சுமி பிரியா, நந்தா, பார்வதி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். தென்னாப்பிரிக்க தீவில் நடைபெறும் இந்த ரியாலிட்டி ஷோவில், நடிகர் ரோபோ ஷங்கர் மகளும் நடிகையுமான இந்திரஜா எலிமினேட் ஆனார்.
தனது மகள் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு விமான நிலையத்தில் வரவேற்ற ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “தோத்தாலும் ஜெயித்தாலும் மீசையை முறுக்குடா பாப்பா” என்று மகளுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த புகைப்படத்துடன் பதிவிட்டார். அதோடு, போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முறையாக இன்று மனம் திறந்திருந்துள்ளார் இந்திரஜா.
அப்பதிவில், “சர்வைவர் நிகழ்ச்சியின் பயணத்திற்கு உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி மக்களே. நீங்கள் இல்லாமல் என்னால் இதைச் செய்ய முடிந்திருக்காது. என்னையே பரிசோதித்துக்கொள்ள ஜீ தமிழ் இந்த வாய்ப்பை வழங்கியது. அர்ஜுன் சார் நீங்கள் என்னை சரியாக வழிநடத்தினீர்கள். என் இணைப் போட்டியாளர்கள் அனைவரும் என்னுடைய ப்ளஸ் மைனஸ் அனைத்தையும் கற்றுக்கொடுத்து நன்றாக கவனித்துக்கொண்டீர்கள். நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு பின்னால் இருக்கும் எனது குடும்பத்திற்கு நன்றி. குடும்பத்தோட அருமை தெரியணும்னா சர்வைவர் நிகழ்ச்சிக்கு போய்ட்டு வாங்க” என்று பதிவிட்டிருக்கிறார்.