மக்கள் பணியில் முடிவே கிடையாது - கமல் ஹாசன் பேச்சு

india people politics kamal mnm
By Jon Apr 08, 2021 03:05 PM GMT
Report

மக்கள் பணியில் முடிவே கிடையாது - கமல் ஹாசன் பேச்சு | Work People Kamal Haasan Speech

மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறியுள்ளாா். தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் தமிழகத்தில் சுமார் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் வாக்குப்பதிவுகள் முடிந்த பின்பு மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமல் ஹாசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி வழங்கினார். அதன் பிறகு அவர் சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டார்.

இதுதொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது, சட்டப் பேரவைத் தோதலில் 72 சதவீதம் வாக்குப் பதிவு நிகழ்ந்திருக்கிறது. கரோனா தொற்று போன்றதொரு அச்சுறுத்தல் தமிழக தோதல் வரலாற்றில் இதற்கு முன் இருந்ததில்லை. இந்த இக்கட்டான சூழலிலும் 72 சதவீத வாக்காளா்கள் தங்களது கடமையை ஆற்றியிருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. அரசியலாளா்களின் பொறுப்பைக் கூட்டுகிறது.

தமிழக மக்களுக்கு என் மனமாா்ந்த பாராட்டுகள். 100 சதவிகிதம் பங்கேற்பே ஜனநாயகம் சென்று சேர வேண்டிய இடம். இனிவரும் தோதல்களில் நம் பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதுதான் ஒரு ஜனநாயக நம்பிக்கைவாதியாக என் ஆசை. இந்த தேர்தல் என்பது முடிவல்ல,மேலும் மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது.

என்னைப் பொருத்தவரை இந்தத் தோதல் ஒரு புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் இது புதிய அனுபவம். நிறைய அனுபவங்களைக் கற்று முன் நகா்ந்திருக்கிறோம். 'மக்கள் அன்பைவிட மகத்தான பலம் இல்லை' என்பது அதில் முதன்மையானது. தமிழகத்தைச் சீரமைப்போம் என்பது வெறும் தோதல் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டுக் கனவு. அதை நோக்கிய பாதையிலும் பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களைக் காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம்.