அரபிக் கடலோரம் 119 கோடியில்... ரன்வீர் - தீபிகாவின் சொகுசு வீடு!

Shah Rukh Khan Deepika Padukone Ranveer Singh Mumbai
By Sumathi Jul 12, 2022 07:39 AM GMT
Report

ரன்வீர் சிங் மற்றும் அவரது தந்தை ஜக்ஜீத் சுந்தர்சிங் பவ்னானியின் ஓ ஃபைவ் ஓ மீடியா ஒர்க்ஸ் எல்எல்பி என்ற நிறுவனம் மும்பையில் ரூ.119 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ரன்வீர் சிங் 

வீட்டின் பரப்பளவை பொறுத்தவரை, 11,266 சதுர அடி கார்பெட் ஏரியாவும் 1,300 சதுர அடி பிரத்யேக மொட்டை மாடியும் உள்ளது. இதன் மொத்தத் தொகை ரூ.118.94 கோடி.

ranveer singh

அந்த இடத்தில் ஏற்கெனவே இருந்த பழைய கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்டு தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

புதிய  அப்பார்ட்மெண்ட்

கீழ் தளத்தில் ஏற்கெனவே பழைய கட்டிடத்தில் வசித்தவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே விலை உயர்ந்த அப்பார்ட்மெண்டுகளில் ஒன்றான இந்த குடியிருப்பு,

சல்மான்கானின் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புக்கும், ஷாருக்கானின் மன்னத் பங்களாவுக்கும் இடையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

sharukh khan

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வீட்டில் 19 கார்களை பார்க் செய்வதற்கான உரிமையையும் சேர்த்து வாங்கியிருக்கிறாராம் ரன்வீர்.

தம்பியின் சடலத்துடன் காத்திருந்த 8வயது சிறுவன்... நெஞ்சை உலுக்கும் சம்பவம்!