“நான்லாம் நடிகனானதே ஒரு அதிசயம்” - நேர்காணலின்போது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய ரன்வீர் சிங்
1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை வைத்து 83 படம் தயாரானது.
மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையில், பெரிய திரையில் வெளியிட வேண்டுமென காத்திருந்து டிசம்பர் 24-ம் தேதி தியேட்டரில் வெளியானது.
கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரது வரவேற்பையும் பெற்றிருக்கிறது 83 திரைப்படம்.
படத்துக்கு இன்று வரை பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக கபில்தேவாக நடித்திருந்த ரன்வீருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடை, உடை என கபில்தேவாவாகவே படத்தில் அவர் வாழ்ந்திருந்தார்.
இந்நிலையில் படத்துக்கும், தன்னுடைய நடிப்புக்கும் கிடைத்த வரவேற்பால் ரன்வீர் திக்குமுக்காடி போயுள்ளார்.
ஒரு நேர்காணலில் உணர்ச்சிவசப்பட்டு ரன்வீர் கண் கலங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொது இடங்களில் அழுவது எனக்கு பிடிக்காது. அதனை நான் விரும்புவதில்லை. ஆனால் 83 படத்துக்கு வரும் வரவேற்பு என்னை கண் கலங்க வைக்கிறது. நான் நடிகனானதே ஒரு அதிசயம் எனக் கூறி கண்கலங்கியிருக்கிறார்.
அந்த வீடியோவுக்கு பதில் அளித்துள்ள பலரும் இது உங்கள் உழைப்புக்கான வெற்றி என்றும், இன்னும் உயரங்களை நீங்கள் தொடவேண்டும் என்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.