குடியரசு தலைவர் தேர்தல்;எதிர்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்பு மனு தாக்கல்..!

Government Of India
By Thahir Jun 27, 2022 06:15 AM GMT
Report

எதிர்கட்சி சார்பில் குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

குடியரசு தலைவர் தேர்தல்  

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடவுள்ள பழங்குடியின பெண் திரௌபதி முர்மு கடந்த 23-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.

யஷ்வந்த் சின்கா இன்று மனுத்தாக்கல்

எதிர் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று மனு தாக்கல் செய்கிறார்.

அவர் வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இடதுசாரித் தலைவர் யெச்சூரி, ராஜா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடன்செல்ல உள்ளனர்.

பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தேசத்துக்கு பேரழிவு

ரப்பர் ஸ்டாம்ப்பாக செயல்படும் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தேசத்துக்கு பேரழிவு ஏற்படும்.

நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியல் எதிரிகளை குறிவைக்க அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவேன் என நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளிக்கும் போது யஷ்வந்த் சின்ஹா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க ஆலோசனை..!