எதிர்க்கட்சிகளின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் யஷ்வந்த சின்ஹா

India
By Irumporai Jun 21, 2022 12:07 PM GMT
Report

எதிர்வரும் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் யஷ்வந்த சின்ஹா | President Election Yashwant Sinha Candidate

எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை போட்டியிட செய்து மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு சேதம் செய்வதை தடுக்க முடிவு செய்துள்ளோம்.

குடியரசுத்தலைவர் வேட்பாளார் யஷ்வந்த் சின்கா

இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் யஷ்வந்த் சின்காவை பொது வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம். அனைத்து அரசியல் கட்சிகளும் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்களிக்க வேண்டும்என எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எதிர்க்கட்சிகளின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் யஷ்வந்த சின்ஹா | President Election Yashwant Sinha Candidate

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை முடிவு செய்ய எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பதவி ராஜினாமா

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் துணைத் தலைவராக இருந்த யஷ்வந்த் சின்கா, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஏதுவாக தனது ராஜினாமா கடிதத்தை  மம்தா பானர்ஜிக்கு அனுப்பி இருந்தார்.

அதனை உறுதி செய்யும் வகையில் ட்வீட் ஒன்றும் செய்திருந்தார். அதில் எதிர்க்கட்சிகளின் நலனுக்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.

ஆளும் பாஜக தரப்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் வெகு விரைவில் உறுதி செய்யப்படுவார் எனத் தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வரும் ஜூன் 29-ஆம் தேதி கடைசி தேதியாகும். தேவைப்படும் பட்சத்தில் ஜூலை 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.