அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க ஆலோசனை..!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க ஆலோசனையானது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்?
மேலும் அதிமுக பொருளாளராக கே.பி.முனுசாமியை நியமிக்க வாய்ப்புள்ளதாகவும்,அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமான நிலையில் தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பொருளாளர் பதவியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு கே.பி.முனுசாமி நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பதியிலேயே வெளியேறினார்.
இடைக்கால பொதுச்செயலாளர்
இந்த நிலையில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் பெரும்பாலனோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், பொதுச்செயலாளராக நியமிக்க அவரது ஆதரவாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே அதிமுக தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை 11- ம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்கிறார் எடப்பாடி பழனிசாமி..!