ஜூலை 11- ம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்கிறார் எடப்பாடி பழனிசாமி..!

By Thahir Jun 27, 2022 04:40 AM GMT
Report

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வரும் ஜூலை 11- ம் தேதி பதவியேற்க உள்ளதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆலோசனை கூட்டம்

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் கடும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

ஜூலை 11- ம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்கிறார் எடப்பாடி பழனிசாமி..! | Eps Will Take Over As Aiadmk General Secretary

இந்த கூட்டத்தில் அடுத்த பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் இந்த கூட்டம் இன்று கூடியுள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு பல நிர்வாகிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

பொதுச்செயலாளராகிறார் எடப்பாடி பழனிசாமி

இந்த கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

வருகிற ஜூலை 11- ம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்க உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.