அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி - இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் நீதிபதிகள் அதிரடி உத்தரவு..!

ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Jun 22, 2022 11:08 PM GMT
Report

அதிமுக பொதுக்குழு நடத்த நீதிபதிகள் துரைசாமி,சுந்தர் மோகன் அமர்வு அனுமதி வழங்கியுள்ளனர்.

நள்ளிரவில் காரசார விவாதம்

அதிமுக பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை குறித்து மேல்முறையீடு மனு மீதான விசாரணை நள்ளிரவு முதல் நடைபெற்று வந்தது.

பொதுக்குழு உறுப்பினர் சண்முகம்,ஓ.பன்னீர்செல்வம்,எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி - இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் நீதிபதிகள் அதிரடி உத்தரவு..! | Permission To Aiadmk General Committee

இந்நிலையில் நீதிபதிகளிடம் ஓ.பி.எஸ் தரப்பு புதிய தீர்மானங்களை நிறைவேற்ற அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினர்.

பொதுக்குழுவுக்கு அனுமதி

இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம் ஆனால்  பொதுக்குழுவில் 23 வரைவு தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களில் முடிவு எடுக்க கூடாது.

அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது. மேலும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க கூடாது என நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு வழக்கு..நீதிபதி துரைசாமி வீட்டின் முன்பு போலீசார் குவிப்பு..!