அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனு தள்ளுபடி

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Jun 22, 2022 02:24 PM GMT
Report

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க வேண்டும் என ராம்குமார் ஆதித்தன், சுரேன், கேசி பழனிசாமி மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.

பொதுக்குழுவுக்கு தடை

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடும் செய்திருந்தார். அதன்படி, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறுகையில், பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்தே அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த 2017-ல் பொதுக்குழு தீர்மானம் மூலம்தான் அதிமுக கட்சி விதிகள் திருத்தப்பட்டன.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனு தள்ளுபடி | Aiadmk General Body Meeting Case Dismissed

அப்போது தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை விட பொதுக்குழுவுக்கே அதிக அதிகாரம் உள்ளது எனக் கூறினார். அதே போல் ஒபிஎஸ் தரப்பில் 23 வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இ மெயில் வந்தது, அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன்.

தள்ளுபடியான மனு

23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஓ.பி.எஸ் ஒப்புதல் அளித்த வரைவு தீர்மானத்தில் ஒற்றைத்தலைமை குறித்த விவகாரங்கள் இல்லை, இதுகுறித்து பொதுக்குழுவில் புதிதாக எதுவும் சேர்க்கக் கூடாது. எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்ட வேண்டும்.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனு தள்ளுபடி | Aiadmk General Body Meeting Case Dismissed

வழக்கமான முறையில் பொதுக்குழு நடக்கலாம், தலைமையில் மாற்றம் கோரும் தீர்மானங்கள் கூடாது என தெரிவிக்கப்பட்டது .

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனு தள்ளுபடி | Aiadmk General Body Meeting Case Dismissed

இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வை எதிர்த்து தொடர்ப்பட்ட இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்தார்   

அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் முன்னின்று காத்து நிற்பேன் : எடப்பாடி பழனிசாமி