அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் முன்னின்று காத்து நிற்பேன் : எடப்பாடி பழனிசாமி

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Jun 21, 2022 04:15 AM GMT
Report

அதிமுகவை அழிக்க சிலர் நினைப்பதாகவும் அது முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குழப்பத்தில் அதிமுக

கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலமை விவகாரம் தமிழ்க அரசியலில் பேசு பொருளாகியுள்ளது இந்த நிலையில் ,அதிமுக தொழில்நுட்ப பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் முன்னின்று காத்து நிற்பேன் : எடப்பாடி பழனிசாமி | Admk Edappadi Palaniswamy Meeting With Admk

அதிமுக பலம் பொருந்திய கட்சி

அதில், அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் அது முடியாது, நான் முன்னின்று காத்து நிற்பேன் என்று தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி எடப்பாடி பழனிசாமி உற்சாகபடுத்தியுள்ளார்

மேலும் அந்த ட்விட்டர் பக்கத்தில் இணைக்கப்பட்டிருந்த வீடியோவில் எடப்பாடி பழனிசாமி அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளிடையே பேசுகிறார். அதில், அதிமுக பலம் பொருந்திய கட்சி. அந்த கட்சி எந்த காலத்திலும் வீழ்ந்ததாக சரித்திரமே இல்லை.

அதிமுகவை அழிக்க சிலர் முயற்சி எடுக்கிறார்கள். அவற்றை முறியடித்து உங்கள் துணை கொண்டு அதிமுக எதிர்க்காலத்தில் பலம் பொருந்திய கட்சியாக இருக்கும். அதை உருவாக்குவதற்கு உங்க ஐ.டி.விங்க் முறையான பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே ஒபிஎஸ் ஈபிஎஸ் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் , ஈபிஎஸ்- ன் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

‘யார் காலிலும் விழ டெல்லி போகல’ - எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர்