யாருக்கு ஒற்றை தலைமை : ஓபிஎஸ் ஆதரவாளர் வெடிகுண்டு மிரட்டல்
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க வேண்டும் என ராம்குமார் ஆதித்தன், சுரேன், கேசி பழனிசாமி மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.
யாருக்கு ஒற்றை தலைமை
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடும் செய்திருந்தார். அதன்படி, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல்
இந்த நிலையில் சேலம் மற்றும் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த தொலைபேசியில் அதிமுகவில் ஒற்றை தலைமையாக ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் சேலம், தாம்பரம் ரயில் நிலையங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்து விட்டு அந்த நபர் தொடர்பினை துண்டித்துள்ளார்.
இதையடுத்து சேலம் , தாம்பரம் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். தற்போது வரைக்கும் சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வெட்க கேடு .. இதுதான் திமுக தமிழை வளர்க்கும் இலட்சணம் : கொந்தளித்த சீமான்