மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியரை நையப்புடைத்த பொதுமக்கள்..!

Tamil nadu Tamil Nadu Police
By Thahir Jul 02, 2022 09:06 AM GMT
Report

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியரை பொதுமக்கள் நையப்புடைத்தனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் சுமார் 250 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பிற்கு தமிழ் ஆசிரியராக உள்ள நிலஒளி (40). அந்த பள்ளியில் படிக்கும் மலைப்பட்டி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி மொபைலில் ஆபாசமாக வீடியோ எடுத்தும், நேரடியாக வீடியோ பதிவிட செய்தும் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

Karur

மாணவி பத்தாம் வகுப்பு படிக்கும் போதே மாணவியை மிரட்டியதாகவும் தேர்ச்சி பெறாத வகையில் செய்து விடுவேன் என்ற மிரட்டி உள்ளார்,

ஆசிரியருக்கு பயந்த மாணவி கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக ஆசிரியர் சொல்வதை அனைத்தையும் அவரது செல்போன் வாட்ஸ் அப்பில் வீடியோவாக காண்பிக்க சொல்லி மிரட்டி உள்ளார்.

வாட்ஸ் அப்பில் வீடியோவை பதிவிடவும் சொல்லியும் மிரட்டி உள்ளார் என கூறப்படுகிறது, இந்த நிலையில் மாணவியின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து மொபைல் போனை ஆராய்ந்து பார்த்ததில் ஆசிரியர் பாலியல் தொல்லை தொடர்ந்து கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

நையப்புடைத்த உறவினர்கள் 

உடனடியாக இன்று மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அந்த பள்ளியின் முற்றுகையிட்டு ஆசிரியர்களை தரையில் அமர வைத்து அடித்து உதைத்தனர்.

இந்த நிலையில் பள்ளி வளாகப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. நான்கு மணிநேர போராட்டத்திற்கு பிறகு லாலாபேட்டை போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

பாலியல் தொல்லை செய்த ஆசிரியர் மீது போக்சோ வழக்கில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியை இழுத்து மூட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

பாலியல் தொழில் ஈடுபட்ட ஆசிரியரை ஆசிரியரின் மொபைல் போனை ஆராய்ந்த போது அந்த போனில் மாணவிகள் மற்றும் பெண்கள் என 200க்கும் மேற்பட்டவர்களின் போட்டோக்கள் இருந்துள்ளது.

ஒரு சில போட்டோக்கள் ஆபாசமாகவும் இருவரும் ஆபாசத்துடன் இருந்த புகைப்படம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மானத்தை பற்றி கவலைப்படாத மனிதர்களின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!