நடுரோட்டில் முடியை பிடித்துக்கொண்டு சண்டை - கல்லூரி மாணவிகள் 10 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவு

Chennai Tamil Nadu Police
2 மாதங்கள் முன்

கல்லூரி மாணவிகள் நடுரோடில் முடியைபிடித்து சண்டையில் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதனிடையே நேற்று மாலை கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக மாணவிகள் காத்துகொண்டிருந்த போது திடீரென இரு தரப்பு மாணவிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நடுரோட்டில் முடியை பிடித்துக்கொண்டு சண்டை - கல்லூரி மாணவிகள் 10 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவு | College Students Suspended Over Indulging In Fight

இது ஒருகட்டத்தில் மோதலாக மாறவே மாணவிகள் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். அப்போது ஆபாசமாகவும் அறுவருக்க தக்கவகையிலும் மாணவிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதை பார்த்த சக மாணவிகளே அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மோதலுக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில் மாணவிகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் 10 பேர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பி.ஏ. முதலாமாண்டு படித்து வரும் மாணவிகள் 10 பேரை 10 நாள் சஸ்பெண்ட் செய்து அரசு கல்லூரி முதல்வர் சுடர்கொடி உத்தரவிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.