மானத்தை பற்றி கவலைப்படாத மனிதர்களின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

M K Stalin
By Thahir Jul 02, 2022 07:17 AM GMT
Report

மானத்தை பற்றி கவலைப்படாத மனிதர்களின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 

கரூரில் இன்று ரூ 581.44 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்காக அடிக்கல் நாட்டி, ரூ 28.60 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

Tamil Nadu

அத்துடன் கரூரில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கரூர் என்றால் பிரம்மாண்டம் ; அதற்கு இந்த விழா ஒரு எடுத்துக்காட்டு. பணிகளுக்கு இலக்கு வைத்து முடித்து காட்டுபவர் அமைச்சர் செந்தில்பாலாஜி .

விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்புகளை குறுகிய காலத்தில் வழங்கியவர். ஆட்சிக்கு வந்த முதல்நாள் முதல் மக்களுக்காக பணியாற்றி வருகிறோம்; கருணாநிதிதான் என்னுள் இருந்து என்னை இயக்கி கொண்டிருக்கிறார்.

உங்களுடைய ஆட்சியில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று மக்களின் முகங்கள் எனக்கு சொல்லுகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல மக்களின் முகத்தில் மகிழ்ச்சி தருகிறது.

M K Stalin

திமுக ஆட்சி மக்களை முன்றேன்றும் ஆட்சியாக அமைந்துள்ளது என்பது தெரிகிறது. ரூ.47 கோடியில் திருமாநிலையூர் விரைவில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

விமர்சனங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை 

கரூரில் ஜவுளி காட்சியரங்கம், ஜவுளி பொருட்கள் சோதனை மையம் அமைக்கப்படும் " என்றார். தொடர்ந்து பேசிய அவர்,

M . K . Stalin

"வீண் விமர்சனங்களுக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மானத்தை பற்றி கவலைப்படாத மனிதர்களின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை.

தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களை நினைத்து நான் மன நிறைவு அடைகிறேன்.என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் மூலம் பிரபலமாக நினைப்பவர்களை பார்த்து வருத்தப்படுகிறேன்.

நானும் இருக்கிறேன் என்பதை காட்ட பேட்டி தருவோருக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. மானம் இல்லாதவர்களிடம் மைக்கை நீட்டாதீர்கள் " என்றார்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளது - டிஜிபி சைலேந்திர பாபு