பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியரை பிடித்து போலீசார் விசாரணை..!
சேலம் மாவட்டத்தில் பள்ளி சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை
சேலம் மாவட்டம் சித்தன் பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அதே பகுதியில், அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்து அழுதுகொண்டே வீட்டுக்கு வந்துள்ளார். மேலும், இனிமேல் தான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் எனவும் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, அச்சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்த போது, தனது பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.
போலீசார் விசாரணை
அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். மேலும், இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆசிரியரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், இந்த புகாரில் உண்மை தன்மை இருந்தால் உடனடியாக ஆசிரியர் கைது செய்யப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.