பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் - துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேட்டி..!
இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
தடை கேட்டு மனு
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு நடத்த எவ்வித தடையும் இல்லை என உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. நள்ளிரவில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி,சுந்தர் மோகன் அமர்வு மேல்முறையீடு மனுவை விசாரித்தனர்.
மேல்முறையீடு மனு மீதான விசாரணை நள்ளிரவு முதல் நடைபெற்று வந்தது. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம்,ஓ.பன்னீர்செல்வம்,எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.
இந்நிலையில் நீதிபதிகளிடம் ஓ.பி.எஸ் தரப்பு புதிய தீர்மானங்களை நிறைவேற்ற அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினர்.
பொதுக்குழுவிற்கு அனுமதி
இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம். பொதுக்குழுவில் 23 வரைவு தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களில் முடிவு எடுக்க கூடாது.
அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது. மேலும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க கூடாது என நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி - இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் நீதிபதிகள் அதிரடி உத்தரவு..!
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan