அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை - ஓ.பன்னீர்செல்வம்..!

AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Jun 16, 2022 04:12 PM GMT
Report

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை என ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் தொண்டர்களால் தேர்தல் மூலமாகவே பொதுச்செயலாளரை உருவாக்க முடியும் என்பது கட்சி விதி, தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளால் பொதுச்செயலாளரை உருவாக்க முடியாது என்றார் எம்.ஜி.ஆர் .

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை - ஓ.பன்னீர்செல்வம்..! | Aiadmk Does Not Need A Single Leader Ops

ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது, டிடிவி தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியும், நானும் இணைந்தோம்.

2016ல் அதிமுக ஆட்சி பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் அரசை காப்பாற்ற வாக்களித்தோம், துணை முதல்-அமைச்சர் என்பது அதிகாரமற்ற பதவி.

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க துணை முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் , ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழுந்தது ஏன் என்று எனக்கே தெரியவில்லை.

எந்த அதிகார ஆசையும் எனக்கு இல்லை,ஒற்றை தலைமை வேண்டும் என்ற புதிய பிரச்சினையை உருவாக்கியவர் அதிமுக நிர்வாகி மூர்த்தி.

என்னையும், தொண்டர்களையும் பிரிக்க முடியாது,எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சினை தேவையா?.

நானோ, எடப்பாடி பழனிசாமியோ ஒற்றை தலைமை குறித்து பேசியது இல்லை,பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவிற்கு கொடுத்த பதவியில் வேறு யாரும் வரக்கூடாது.

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு பொதுக்குழுவில் வைக்க வேண்டும் என்ற மரபுக்காகவே கூட்டம் நடத்தினோம், பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு இருவரின் ஒப்புதலும் தேவை.

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை * ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என முடிவு செய்திருந்தோம்.

நகமும் சதையும் போல் ஒபிஎஸ் ஈபிஎஸ் உள்ளனர் : அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்