அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி - உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுக்குழு நாளை திட்டமிட்டபடி நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பாக இருந்து வருகிறது.ஒரு பக்கம் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மறு பக்கம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இரு தரப்பினரும் குவிந்து வருகின்றனர்.
இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.ஓபிஎஸ் தரப்பினரிடம் ஈபிஎஸ் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தது.
நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.
பொதுக்குழு நடத்த அனுமதி
இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும் கட்சியின் விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு தடை வேண்டியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பொதுக்குழு நாளை நடைபெறுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் கட்சிகளின் அடிப்படை விதிகளில் எவ்வித மாற்றமும் செய்ய எவ்வித தடையும் இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சென்னை வானகரத்தில் தனியார் மண்டபத்தில் நாளை திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்கு ஒற்றை தலைமை : ஓபிஎஸ் ஆதரவாளர் வெடிகுண்டு மிரட்டல்