அதிமுக அலுவலகம் செல்லும் ஓபிஎஸ்.. பொதுக்குழு கூட்டத்திற்கு செல்லும் ஈபிஎஸ்..
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழுவுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9:15 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒருங்கிணைப்பாளரான தன்னுடைய ஒப்புதல் இல்லாமல்
ஓபிஎஸ் வழக்கு
பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது.பொதுக்குழு கூடும் நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் சென்றுள்ளார்.
பலத்த வரவேற்பு
காலை முதலே ஆதரவாளர்களுடன் ஆலோசித்த நிலையில் தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார் பன்னீர்செல்வம். அதிமுக பொதுக் குழுவிற்கான பணிகள் வானகரத்தில் நடைபெற்று வரும் நிலையில் பூட்டப்பட்டிருக்கும்
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர். இதனிடையே அதிமுக பொதுக்குழு நடைபெறும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் பலத்த வரவேற்பளித்து வருகின்றனர்.
ரணகளமாகும் அதிமுக தலைமைக் கழகம் -ஆதரவாளர்கள் சரமாரி மோதல்!