ரணகளமாகும் அதிமுக தலைமைக் கழகம் -ஆதரவாளர்கள் சரமாரி மோதல்!
அதிமுக பொதுக்குழு இன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
பொதுக்குழு
வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு இதுதான். கட்சியின் ஒரு தொண்டர் பொதுச்செயலாளர் ஆகிறார் என்பதுதான் வரலாற்று சிறப்பு என முன்னாள அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றார். தற்காலிக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்படுவார் என ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
பரபரப்பு
சென்னை பசுமைவழைச்சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து தலைமை அலுவகலத்திற்கு ஓபிஎஸ் புறப்படுகிறார். அவரது ஆதரவாளர்கள் ஏற்கெனவே அங்கு கூடியுள்ளனர்.
இன்று காலை முதல் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டு போடப்பட்டு உள்ள நிலையில் ஓபிஎஸ் அங்கு செல்கிறார். அதிமுக அலுவலகம் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
தள்ளுமுள்ளு
ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு நிலவி வருகிறது. அதிமுக அலுவலகம் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருதரப்பு ஆதரவாளர்களும் சட்டையை பிடித்து கிழித்து கட்டிப்புறண்டு சண்டை போட்டு வருகின்றனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் இருதரப்பு ஆதரவாளர்களிடையே மாறி மாறி கல்வீசி தாக்குதல் நடத்தி கொள்கின்றனர்.
தாக்குதல்
செருப்பு, சேர், கட்டை என கையில் கிடைக்கு பொருட்களை வைத்து தாக்குதல் நடத்தி கொள்கின்றனர். அதிமுக தலைமை அலுவகத்தில் நடக்கும் வன்முறையில் ஓபிஎஸ் ஆதரவாளருக்கு கத்திகுத்து விழுந்துள்ளது.
பொதுக்குழு.. அதிமுகவினர் விபத்தில் காயம் - 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனியில் அனுமதி!
பிரித்தானியாவில் சிறப்புற நடைபெற்ற மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை 150ஆவது ஆண்டு விழா! IBC Tamil
ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை IBC Tamil