அழுத்தம் கொடுத்தாங்க...ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி

Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Sumathi Jun 26, 2022 03:16 AM GMT
Report

தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஜெயதேவி  நீண்ட காலமாக ஓபிஎஸ் ஆதரவாளராக பார்க்கபட்டவர்.

மகளிர் அணி துணை செயலாளர்

இரண்டு நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த அவர் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் அவரை சந்தித்து மன்னிப்பு கோரினார்.

அழுத்தம் கொடுத்தாங்க...ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி | Opanneerselvam Coming To Chennai

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் ஒற்றை தலைமையாக்க ஆதரவு அளிக்காத நபர்களை கட்சியில் இருந்து நீக்குவோம் என தெரிவித்ததால் மட்டுமே

 ஓபிஎஸ்  ஆதரவு

அவருக்கு ஆதரவு அளித்ததாக தெரிவித்தார். “அம்மா இறந்தவுடன் ஓபிஎஸ் அவர்கள் வழியை தான் தொடர்ந்தோம். எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் பதவிக்கு வந்தவுடன் ஆதரவு அளிக்காதவர்களை

அழுத்தம் கொடுத்தாங்க...ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி | Opanneerselvam Coming To Chennai

கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி விடுவோம் என மாவட்ட செயலாளர் மூலம் அழுத்தம் தந்தனர் அதனால் தான் அங்கு சென்றோம். அரை மணி நேரம் தான் அங்கு இருந்தோம்.

 எடப்பாடி தரப்பில் அழுத்தம்

அதன் பின்னர் ஓபிஎஸ் டெல்லியில் இருந்து வரும் வரை மன நிம்மதி இல்லாமல் இருந்தேன். தற்போது விமான நிலையத்தில் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டேன்

மீண்டும் ஓபிஎஸ் -க்கு ஆதரவு அளிக்க வந்து விட்டேன். தொடர்ச்சியாக எடப்பாடி தரப்பில் அழுத்தம் தந்து கொண்டுள்ளனர். பொதுக்குழுவில் மிகவும் மோசமாக நடந்து கொண்டனர்.” என்று கூறினார் ஜெயதேவி.

நபியை பற்றி யாராவது வாயை திறந்தால் ஒட்டுமொத்த இந்தியாவே ஒன்று கூடும் - அமைச்சர் அன்பில் மகேஷ்..!