தேனியில் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மை எரிப்பு - போலீசாரை கண்டதும் தெறித்து ஓடிய கட்சியினர்
தேனியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
அதிமுக பொதுக்குழு நேற்று காரசாரமாக முடிந்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை ஒழித்துகட்டிவிட்டு எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அடுத்த பொதுக்குழு தேதியும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தண்ணீர் பாட்டிலை வீசியெறிந்தனர்.இதற்கு அதிமுகவினர் ஒருதரப்பினர் மத்தியில் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு நடவடிக்கையையும், ஓபிஎஸ் கார் டயர் பஞ்சராக்கியதை கண்டித்தும், தேனி பழைய பேருந்து நிலையம் அருகே ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உருவபொம்மையை எரிக்க முயற்சி
மேலும் அப்போது, எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். இதைக்கண்ட காவல்துறையினர், அதை தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை பறித்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஈபிஎஸ் உருவபொம்மையை எரிக்க முயன்ற நபர்கள், காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடினர்.
இது தொடர்பாக யாரும் புகார் அளிக்காத நிலையில் யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.