தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் எம்.ஜி.ஆர் மற்றொருவர் ஜெயலலிதா - ரவீந்திரநாத் குமார்..!
நீதி வழங்கிய நீதிபதிகள் இருவரையும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மாவாக பார்பதாக எம்.பி ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழுவுக்கு அனுமதி
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு நடத்த எவ்வித தடையும் இல்லை என உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. நள்ளிரவில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி,சுந்தர் மோகன் அமர்வு பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை குறித்து மேல்முறையீடு மனு மீதான விசாரணை நள்ளிரவு முதல் நடைபெற்று வந்தது.

பொதுக்குழு உறுப்பினர் சண்முகம்,ஓ.பன்னீர்செல்வம்,எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.
இந்நிலையில் நீதிபதிகளிடம் ஓ.பி.எஸ் தரப்பு புதிய தீர்மானங்களை நிறைவேற்ற அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினர்.
இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம். பொதுக்குழுவில் 23 வரைவு தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களில் முடிவு எடுக்க கூடாது.
அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது. மேலும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க கூடாது என நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ரவீந்திரநாத் குமார் புகழாரம்
இந்நிலையில் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த ரவீந்திரநாத் குமார் எம்.பி, இந்த தீர்ப்பு என்பது அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

25 லட்சம் தொண்டர்கள் கொண்ட இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்களாக வளர்த்தெடுத்தவர் அம்மா இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுகவை பொறுத்த வரை இரண்டு நீதிபதிகளாக அவர்கள் இருந்தாலும் புரட்சி தலைவர் ஒரு நீதிபதி புரட்சித் தலைவி அம்மா ஒரு நீதிபதி இரண்டு தலைவர் நீதியை வழங்கியிருக்கிறார்கள்.
வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழுவை புரட்சி தலைவி அம்மா எந்த நோக்கத்திற்காக பொதுக்குழுவை நடத்துவார்களோ அது படி பொதுக்கு நடக்கும் என தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி - இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் நீதிபதிகள் அதிரடி உத்தரவு..!
ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலடி...! அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள நேரடிப் போர் எச்சரிக்கை IBC Tamil