முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பி..!

M K Stalin O. Panneerselvam
By Thahir May 19, 2022 03:12 AM GMT
Report

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பியை சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

மாநில வளர்ச்சிக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்தரநாத் பங்கேற்றார்.

[UVDTQC ]

கூட்டம் நிறைவு பெற்ற பிறகு,முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தனியாக சந்தித்து பேசினார். அப்போது பழமை வாய்ந்த தேனி மாவட்ட அரசு மருத்துவமைனைக்கு பல்வேறு நவீன வசதிகள் செய்த தருமாறு கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரவீந்தரநாத்தின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு உடனடியாக நிறைவேற்றுவதாக கூறினார்.