அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் - சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்!

Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Sumathi Jun 19, 2022 06:29 AM GMT
Report

அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற தலைப்பில் வெளியான ஓபிஎஸ் குறித்த விளம்பரத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ்

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடக்க உள்ள நிலையில், ஒற்றைத் தலைமை கோஷம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் - சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்! | News Paper Ad About Ops Become Controversial

இதைத் தொடர்ந்து, கடந்த 5 நாட்களாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரையும் அவர்களது ஆதரவாளர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

இதற்கிடையே, சென்னையில் மூத்த நிர்வாகிகள் ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தொடர்ந்து 4 நாட்கள் ஆலோசனை நடத்தினார்.

அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் - சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்! | News Paper Ad About Ops Become Controversial

மேலும், சேலத்தில் இபிஎஸ்ஸை சந்தித்துவிட்டு வந்த தம்பிதுரையும் ஓபிஎஸ்ஸை சந்தித்தார். பின்னர், ஓ.பன்னீர்செல்வத்தை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் முன்னாள் எம்எல்ஏ தனியரசு சந்தித்து பேசினார்.

அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம்

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் மக்களவை தேர்தல், சட்டசபை தேர்தலில் தோல்வியே கிடைத்தது என்றும் அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், ஓ.பன்னீர் செல்வம் தலைமை ஏற்றால் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைவார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரபல நாளிதழில் முன்பக்கம் முழுவதுமாக "அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம்" என்ற தலைப்பில் ஓ. பன்னீர்செல்வம் குறித்த விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த விளம்பரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனதில் பட்டதை பேசுவேன்.. சர்ச்சை குறித்து சாய்பல்லவி விளக்கம்! வைரலாகும் வீடியோ