பிரபல சுற்றுலா நிறுவனத்தை டேக் செய்யும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி.. ஏன் தெரியுமா?

Nayanthara Tamil Cinema Spain Vignesh Shivan
By Thahir Aug 24, 2022 12:32 PM GMT
Report

ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி பிரபல சுற்றுலா நிறுவனமான gt holidays-ஐ டேக் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

திருமணம் 

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

பிரபல சுற்றுலா நிறுவனத்தை டேக் செய்யும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி.. ஏன் தெரியுமா? | Nayanthara Vignesh Shivan Spain Trip Without Spent

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,  நயன்தாரா கடந்த ஜுன் 9ஆம் தேதி மகாபலிபுரம் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர்.

ஹனிமூன்

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவுக்காக சென்றனர். பின்பு அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார் விக்னேஷ் சிவன்.

பிரபல சுற்றுலா நிறுவனத்தை டேக் செய்யும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி.. ஏன் தெரியுமா? | Nayanthara Vignesh Shivan Spain Trip Without Spent

பின்னர் இந்தியா திரும்பிய இருவரும் திரைப்பட வேலைகளில் பிசியாகின. நயன்தாரா ஜவான் திரைப்பட படப்பிடிப்புக்காக மும்பை சென்ற நிலையில் சென்னை திரும்பினார்.

செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு நிகழ்ச்சி

திருமணத்திற்கு பின்பு, நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

இதனிடையே விக்னேஷ் சிவனுக்கு, சென்னையில் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் தொடக்க விழாவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக அமைந்ததால், ரஜினி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விக்னேஷை பாராட்டிய நயன்தாரா

இந்த தொடக்க விழாவில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வந்ததன் காரணமாக நயன்தாரா பங்கேற்கவில்லை, இருந்த போதும் நேரலையில் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நயன்தாரா தனக்கு மெசேஜ் அனுப்பியதாக தெரிவித்தார் விக்னேஷ் சிவன்.

பிரபல சுற்றுலா நிறுவனத்தை டேக் செய்யும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி.. ஏன் தெரியுமா? | Nayanthara Vignesh Shivan Spain Trip Without Spent

அவர் அனுப்பிய மெசேஜில் வாவ்..செம Grand, Extraordinary Wikky கலக்கிட்டனு பாராட்டியதாக கூறினார். நயன்தாராவே விக்னேஷ் சிவனை வாழ்த்தியதால் விக்னேஷ் சிவன் அளவற்ற சந்தோஷத்தில் அப்பொழுது இருந்ததாகவும் தொலைக்காட்சி ஒன்றில் பேசியிருந்தார். 

ஸ்பெயின் நாட்டில் சுற்றுலா 

திருமணம் முடிந்த பிறகு நயன்தாரா விக்னேஷ் சிவன் இரண்டாவது முறையாக ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

முதல் முறையாக தாய்லாந்து நாட்டிற்கு சென்ற போது தங்கள் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

Nayanthara

அதே போல் இந்த முறையும் விக்னேஷ் சிவன் ஸ்பெயின் நாட்டில் ஹோட்டல், பேருந்து மற்றும் தெருக்களில் நடந்து செல்லுவது ரொமன்ஸ் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

என்ஜாய் செய்யும் நயன்தாரா

இந்த நிலையில் பிரபல சுற்றுலா நிறுவனம் மூலம் அவர்கள் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

gt holidays

இவர்களுடன் ஒரு வீடியோ கிராபர்,  இரண்டு போட்டோ கிராபர்,  இரண்டு மேக்கப் ஆர்டிஸ்ட்,  ஒரு வீடியோ எடிட்டர்,  ஒரு புரோடியூசர் என ஒரு பட்டாளமே கிளம்பி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுலா புகைப்படங்களை பதிவிட்டு வரும் விக்னேஷ் சிவன் தங்களை சுற்றுலா அழைத்துச் சென்று சிறப்பாக கவனித்து வரும்  gt holidays என்ற  சுற்றுலா நிறுவனத்தையும் டேக் செய்து பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது.

பிரபல சுற்றுலா நிறுவனத்தை டேக் செய்யும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி.. ஏன் தெரியுமா? | Nayanthara Vignesh Shivan Spain Trip Without Spent

இதனால் தான் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள பதிவுகளில்  gt holidays நிறுவனத்திற்கு நன்றி சொல்லி குறிப்பிட்டுள்ளார்.        

பல இடங்களுக்கு செல்லும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி என்ஜாய் செய்து புகைப்படங்களை பதிவேற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.