கழுத்தில் புதிய டாட்டூ போட்டுக்கொண்ட நயன்தாரா - என்ன அர்த்தம் தெரியுமா?

Nayanthara Vignesh Shivan Gossip Today Viral Photos
By Sumathi 3 மாதங்கள் முன்

நடிகை நயன்தாரா கழுத்தில் டாட்டூ போட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

பார்சிலோனா பயணம்

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த வாரம் தங்களின் இரண்டாவது ஹனிமூனுக்காக ஸ்பெயின் புறப்பட்டனர். பார்சிலோனா மற்றும் வெலன்சிய ஆகிய நகரங்களில் விடுமுறையை கழித்து வரும் விக்கியும் நயனும் தங்களின் போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

கழுத்தில் புதிய டாட்டூ போட்டுக்கொண்ட நயன்தாரா - என்ன அர்த்தம் தெரியுமா? | Nayanthara Neck Tattoo And Its Meaning

நாட்டின் 76வது சுதந்திர தினத்தை பார்சிலோனாவில் கோலாகலமாக கொண்டாடினர். பார்சிலோனா நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் தேசியக் கொடியை ஏந்தியப்படி இருவரும் நடந்து சென்றனர்.

நயன்-புதிய டாட்டூ

அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரையும் பாராட்டி தள்ளினர். தொடர்ந்து, பார்சிலோனா வீதிகளில் கைகளை கோர்த்தப்படியும், நெருக்கமாக நின்றப்படியும் ரொமாண்டிக் போட்டோ ஷூட்டை நடத்தினர்.

கழுத்தில் புதிய டாட்டூ போட்டுக்கொண்ட நயன்தாரா - என்ன அர்த்தம் தெரியுமா? | Nayanthara Neck Tattoo And Its Meaning

இந்நிலையில், நயன்தாராவின் கழுத்துக்கு பின் புறம் டாட்டூ ஒன்று இருப்பதை நெட்டிசன்கள் சிலர் கண்டுபிடித்து டிரெண்ட் செய்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் வெளியிடும் நயன்தாராவின் போட்டோக்களில் பெரும்பாலும் அவரது பின்புற கழுத்து பகுதி தெரியாத வண்ணமே உள்ள நிலையில்,

டாட்டூ அர்த்தம்

நயன்தாராவின் இந்த கழுத்து டாட்டூ போட்டோவை ரசிகர்கள் ஜூம் செய்து பார்த்து வருகின்றனர். கழுத்து பகுதியில் டாட்டூ போடுவதென்பது மிகவும் கஷ்டமான ஒன்று. அவ்வாறு போட்டால் துணிச்சலான மற்றும் சவாலான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் என்று அர்த்தமாம்.

கழுத்தில் புதிய டாட்டூ போட்டுக்கொண்ட நயன்தாரா - என்ன அர்த்தம் தெரியுமா? | Nayanthara Neck Tattoo And Its Meaning

ஏற்கனவே நயன் பிரபுதேவாவை காதலித்த கால கட்டத்தில் அவருடைய பெயரை கையில் டாட்டூ போட்டு பின்பு அதை பாசிட்டிவிட்டி என்று மாற்றியது குறிப்பிடத்தக்கது.