ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இனி நாடு முழுவதும் தடை!
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் நாடு முழுவதும் தடை செய்யபப்டுகிறது என மத்திய சுற்றுச்சூழல், வனம், மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த மாநிலங்கள்
இந்தியாவிலேயே முதன் முறையாக 2009-ம் ஆண்டில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நெகிழிப் பொருட்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், உத்திரபிரதேசம், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் நெகிழிக்கு(பிளாஸ்டிக்) தடை விதிக்கப்பட்டது.
கோவா, குஜராத், கேரளா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நெகிழி பயன்பாட்டுக்கு பகுதியளவு தடை விதிக்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு கேரளாவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமயான தடை விதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் அதிகபடியான பாதிப்பு ஏற்படுவதால் அதன் உற்பத்தி, இறக்குமதி,
இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவை இன்று முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படுகிறது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம், மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த நெகிழிப்பொருட்களின் பயன்பாட்டை கைவிடுவதற்கு அரசு போதிய அவகாசம் அளித்துள்ளது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு..!