ஜுலை 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் உற்பத்தி,விற்பனைக்கு தடை..!
நாடு முழுவதும் வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் உற்பத்தி,விற்பனைக்கு தடை
மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான இந்தியாவின் உறுதிபாட்டை வலுப்படுத்தும் நோக்கில் விரிவான செயல் திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி ஜுலை 1-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் தடை செய்வதற்காக கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு 12-ந் தேதி மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஒரு முறை பயன்படுத்தப்படும் குறைவான பயன்பாடு கொண்டு அதிக குப்பைகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி இறக்குமதி சேமிப்பு வினியோகம் விற்பனை பயன்பாடு ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதும் 1-ந் தேதி முதல் தடை செய்யப்படும்.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்க வேண்டாம் என தேசிய,மாநில மற்றும் உள்ளூர் மாவட்டங்களில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் வணிகர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சோதனைச்சாவடிகள் மூலம் கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
தடை விதிக்கப்படும் பொருட்கள்:-
* பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி
* பலூனில் கட்டப்படும் பிளாஸ்டிக் குச்சி
* பிளாஸ்டிக் குச்சி
* பிளாஸ்டிக் கொடி
* மிட்டாயில் இருக்கும் பிளாஸ்டிக் குச்சி
* ஐஸ்கிரீம் குச்சி
* அலங்கார வேலைகளுக்கான தெர்மகோல்
* சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் முள்கரண்டி, தேக்கரண்டி, கத்தி
* சுவீட் பாக்ஸ், அழைப்பிதழ், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை சுற்றி கட்டப்படும் பிளாஸ்டிக் சுருள்கள்
* பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி. பேனர்கள்