ரஷ்யா உக்ரைன் போர் வந்தால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பா ? யார் பக்கம் நிற்கும் இந்தியா ?
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.
போர் நடத்தும் எண்ணம் இல்லாவிட்டால் எதற்காக எல்லையில் படைகளை குவிக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் கேள்வியாக உள்ளது. ரஷ்யா எந்த நேரத்திலும் வான்வழியாக குண்டுகளை வீசி போரை தொடங்கலாம் என அமெரிக்கா தனக்கு கிடைத்த உளவுத் துறை ஏற்கனவே உக்ரைனை எச்சரித்திருந்தது.
மேலும் உக்ரைனிலிருந்து அமெரிக்கர்களையும் நாடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது. இது போல் 12க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை தாய்நாட்டுக்கு திரும்ப வந்துவிடுமாறு அழைத்துள்ளார் .
இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் படையெடுப்பு நாளை (பிப்.16) தொடங்கலாம் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்
தற்போது இந்தியாவும் அங்கு உள்ள மக்களை உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது , உக்ரைன் ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவும் பரபரப்பான சூழ்நிலையில் நாளை ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்கலாம் என கூறப்படுகிறது.
அதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் நேரடியாக தலையிட்டால் நிச்சயம் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மிகப்பெரிய மோதலாக இருக்கும் என எச்சரிக்கின்றனர் சர்வதேச வல்லுநர்கள் .
இவற்றையெல்லம் கடந்து உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் இந்தியா சந்திக்கும் சவால்கள் என்ன வாருங்கள் காண்போம் அமெரிக்காவை கடந்து தொடக்கம் முதலே நம்முடன் நட்பு நாடக இருந்து வருவது ரஷ்யா .
2016 - 20 காலகட்டத்தில் இந்தியா இறக்குமதி செய்த பாதுகாப்பு தளவாடங்களில் சுமார் 50% ரஷ்யாவிலிருந்து வந்தவை. இந்திய விமானப்படையில் இருக்கும் 71% ஜெட் விமானங்களும் ரஷ்யாவிலிருந்து வந்தவை அல்லது ரஷ்ய உதவியுடன் தயாரிக்கப்பட்டவையே.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்து சேர்ந்த ஏவுகணை பாதுகாப்பு தொழில்நுட்பமும் ரஷ்யாவுடையதே. அதே சமயம் சர்வதேச அளவில் பல விவகாரங்களில் இந்தியாவிற்கு கரம் கொடுக்கும் நண்பணாக இருக்கிறது ரஷ்யா.
தற்போது உருவாகியுள்ள உக்ரைன் பிரச்னையால் சிக்கல் ஏற்படலாம் மேலும், அமெரிக்கா - ரஷ்யா இருவர் பக்கமும் சாயாமல் இருக்கிறது போரே வேண்டாம் என்ற கொள்கையில் உள்ளது இந்தியா.
நாளை உக்ரைன் மீது ரஷ்யா போர்வெடித்தால் இந்தியா ரஷ்யா அல்லது அமெரிக்கா ஏதேனும் ஒரு பக்கம் சாய்ந்தாக வேண்டும்; இல்லையெனில், இரண்டு பக்கமும் அதிருப்தியைச் சந்தித்தாக வேண்டும்.
உக்ரைன் விவகாரத்தில்இந்தியா ரஷ்யாவை ஆதரித்தால் பிரச்சினை பெரிதாகும் தீராத எல்லைப் பிரச்னை, இலங்கை ,பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் ஆதிக்கம் என சீனாவால் நெருக்கடியை சந்திக்கும் இந்தியாவுக்கு, அமெரிக்கா நமக்கு கைகொடுத்துள்ளது .
அமெரிக்க பக்கம் இந்தியா இல்லையென்றால் ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாடுகளின்மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும்.
அவ்வாறு ரஷ்யாவுடன் நாம் ஆயுத ஒப்பந்தம் செய்துள்ளதால் இந்தியா மீதும் பொருளாதாரத் தடை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஒருவேளை உக்ரைன் விவகாரத்தில் இந்தியா, ரஷ்யா பக்கம் சாய்ந்தால், இந்தப் பொருளாதாரத் தடைக்கு வாய்ப்பு அதிகம் என்கின்றனர் நிபுணர்கள்.
அதேசமயம் இந்தியா அமெரிக்காவை ஆதரித்தால், அதனால் ஒருபக்கம் ரஷ்யாவின் நட்பையும் இழந்து, மறுபக்கம் சீனாவுக்கு ஆதரவாக அமைந்துவிடும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும்பட்சத்தில், அமெரிக்கா, ரஷ்ய நாடுகளின் விவகாரத்தில் இந்தியாஎப்படி நகர்கிறது என்பதைப் பொறுத்தே, பின்விளைவுகளும் தெரியவரும்.
கடந்த சில நாட்களாகவே ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக இந்திய பங்கு சந்தையானது பலத்த வீழ்ச்சி கண்டு வருகின்றது.