தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு..!

Government of Tamil Nadu Madurai
By Thahir Jul 01, 2022 06:54 AM GMT
Report

அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பு

தமிழக அரசின் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில்,

அந்த பணிகளை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு..! | Interim Ban On Appointment Of Temporary Teachers

தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 முதுநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 12,000 வழங்கப்படும் என்றும் 10 மாதங்களுக்கு மட்டும் மதிப்பூதியம் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு எதிராக வழக்கு

இந்த அறிவிப்பை எதிர்த்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்றும், இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.  

நீதிபதி எம். எஸ். ரமேஷ் கருத்து

இந்த வழக்கு தொடர்பாக நேற்று பேசிய நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்றும், இது ஏற்கத்தக்கது அல்ல என்றும்,

மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான தகுதி அற்றவர்களை பணியில் அமர்த்த வாய்ப்பாக இது அமையும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், அரசு தரப்பில் உரிய விளக்கம் தரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்திவைத்தார்.

இடைக்கால தடை 

இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆசிரியர்களை தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கும்.

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு..! | Interim Ban On Appointment Of Temporary Teachers

முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும் வேறுபாடு உள்ளது என்று தெரிவித்ததுடன், அரசு பள்ளிகளில் நிரந்திர ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை உள்ளது? என்று கேள்வியும் எழுப்பியது.

மேலும், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நம் உயிர்காக்கும் மருத்துவர்களை போற்றிடுவோம் - மருத்துவர்கள் தினத்தையொட்டி முதலமைச்சர் வாழ்த்து