தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

tamilnadu
By Nandhini Nov 03, 2021 11:34 AM GMT
Report

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

பல்வேறு ஆசிரியர் சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நவ.4, 5 ஆகிய நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவ.6-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. நாளை முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை என்பதால், சொந்த ஊர் செல்வோர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.   

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு | Tamilnadu