நம் உயிர்காக்கும் மருத்துவர்களை போற்றிடுவோம் - மருத்துவர்கள் தினத்தையொட்டி முதலமைச்சர் வாழ்த்து
மருத்துவர்கள் தினத்தையொட்டி “பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களை போற்றிடுவோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
மருத்துவர்கள் தினம்
டாக்டர் பி.சி.ராய் பிறந்த மற்றும் மறைந்த நாளான ஜுலை 1 ஆம் தேதியை தேசிய மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
மருத்துவர் பி.சி.ராய் 1882 ஆம் ஆண்டு ஜுலை 1 ஆம் தேதி பீகாரில் உள்ள பான்கிபூரில் பிறந்தார். அவரது நினைவை போற்றும் வகையில்மருத்துவம்,
அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.இவர் 1962 ஆம் ஆண்டு காலமானார்.
முதலமைச்சர் வாழ்த்து
இந்த நிலையில் மருத்துவர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர்கள் தினம். பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களை போற்றிடுவோம் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளான இன்று தேசிய #DoctorsDay!
— M.K.Stalin (@mkstalin) July 1, 2022
பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்!