ஓட்டுநர்களுகள் இனி இதை செய்யக் கூடாது : போக்குவரத்துத்துறை போட்ட அதிரடி உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து ஓட்டுநர்கள்,இனி உரிய பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு உத்தரவு
குறிப்பாக,பேருந்து நிறுத்தத்தை தாண்டியோ,சாலையின் நடுவிலோ பேருந்தை நிறுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும்,பேருந்து நிறுத்தத்தை விட்டு பேருந்தை தள்ளி நிறுத்துவதால், பயணிகள் சிரமப்படுகிறார்கள்.
ஆகவே,பேருந்து நிறுத்தத்தை தாண்டி நிறுத்தும்போது பயணிகள் ஓடிச்சென்று பேருந்தில் ஏற முயலும்போது பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
ஒட்டுநர் நடத்துனர்களுக்கு அறிவுரை
சில நேரங்களில் மரண தொடர்பான விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது எனவும் கூறி அனைத்து ஓட்டுநர்,நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் மட்டும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி,இறக்கிவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'' என் மார்பகங்கள் குறித்து பெருமை அடைகிறேன்" : கொந்தளித்த இலங்கை முன்னாள் எம்.பி , நடந்தது என்ன?