'' என் மார்பகங்கள் குறித்து பெருமை அடைகிறேன்" : கொந்தளித்த இலங்கை முன்னாள் எம்.பி , நடந்தது என்ன?
இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராகப் போராடிய முன்னாள் எம்.பி. ஹிருணிகா பிரேமசந்திரா, போராட்டக் களத்தில் மாராப்பு விலகி மார்பகங்கள் தெரிந்த நிலையில் அதனை புகைப்படமாக எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
கொந்தளித்த பிரேமசந்திரா
இது குறித்து ஹிருணிகா பிரேமசந்திரா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் எனது மார்பகங்கள் குறித்து பெருமை கொள்கிறேன். நான் இந்த மார்பகங்களைக் கொண்டு தான் மூன்று அழகான குழந்தைகளுக்கு பால் கொடுத்து வளர்த்து ஆளாக்கி இருக்கிறேன்.
எனது மார்பகங்கள் வெளியில் நான் போராட்டக் களத்தில் இருந்தபோது எதேச்சையாக வெளியில் தெரிந்ததை வைத்து சிலர் மோசமான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
நான் போலீஸாருடன் போராடிக் கொண்டிருந்தேன். அப்போது என் சேலை விலகியுள்ளது. இது எப்படி அவர்களுக்கு விரசமாகத் தெரிந்தது. எனது மார்பகங்களை விமர்சிப்பவர்கள் குழந்தையாக இருந்தபோது ஒரு தாயின் மார்பில் பால் குடித்தவர்கள் தானே.
எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். என்னைவைத்து மீம்ஸ் செய்யலாம், விமர்சிக்கலாம். ஆனால் நீங்கள் அதை செய்து கொண்டிருக்கும் நேரம் ஒரு அப்பாவி இலங்கை குடிமகன் வரிசையில் அத்தியாவசியப் பொருளுக்காக காத்திருந்து உயிரிழந்திருப்பார்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரபல அரசியல்வாதியின் மகள்
இலங்கையின் பிரபல அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகள்தான் ஹிருணிகாபிரேமசந்திர.2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் போது, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என குற்றச்சாட்டப்பட்ட பிரபல அரசியல்வாதியான துமிந்த சில்வா உள்ளிட்ட தரப்பிற்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கினார் ஹிருணிகா பிரேமசந்திரா
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை