நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறை - அமைச்சர் பதிலால் பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழக அரசு ministerrajakannappan tnstc தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்
By Petchi Avudaiappan Jan 04, 2022 04:58 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் போக்குவரத்து துறை  நஷ்டத்தில் இயங்குவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பண் தெரிவித்துள்ளார்.

மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒமைக்ரான் தொற்றை பொறுத்தவரையில் அதனுடைய பரவல் அதிகமாக இருந்தாலும் பாதிப்பு குறைவாகதான் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதுகுறித்து முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனால் யாரும்  பயப்பட வேண்டிய அவசியமில்லை என  தெரிவித்தார். 

மேலும் பொங்கல் பண்டிகைக்கு  தீபாவளி பண்டிகையின்போது செய்ததுபோலவே தனித்தனியே ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் பேருந்துகள் விடப்படும்.போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விகிதாச்சார அடிப்படையில் நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வரின் ஆலோசனை கேட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், போக்குவரத்து துறை ஏற்கனவே ரூ. 48,154 கோடி நஷ்டத்தில் செல்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தொழிற்சங்க கூட்டங்கள் மூன்று வருடத்திற்கு முன்பு நடைபெற வேண்டியது தற்போதுதான் நடைபெற்று உள்ளது. ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி நல்லதொரு தீர்வு கொண்டு வருவோம் என  அமைச்சர் ராஜ கண்ணப்பண் தெரிவித்துள்ளார்.