மின் தட்டுப்பாட்டை தடுக்க அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை

V. Senthil Balaji Government of Tamil Nadu
By Thahir Jun 14, 2022 06:00 AM GMT
Report

மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சற்று குறைந்தது மின்வெட்டு 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் இருந்து வருகிறது. புதிய திட்டங்கள் மூலம் அதிக அளிவு மின் உற்பத்தி கிடைப்பதால் மின் தட்டுப்பாடு தற்போது சற்று குறைந்துள்ளது.

மின் தட்டுப்பாட்டை தடுக்க அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை | Minister Senthil Balaji Meeting Power Shortage

இருந்தாலும் தொழிற்சாலைகள்,வணிக நிறுவனங்களுக்கான மின் தேவையை சமாளிக்க வேண்டிய சூழல் தற்போது தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

எதிர்கால மின்தேவையை கருத்தில் கொண்டு எதிர்கால தேவையை உணர்ந்து திட்டங்களை வகுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அமைச்சர் ஆலோசனை 

இந்த நிலையில் மின் தட்டுப்பாட்டை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் பங்கேற்கின்றனர். விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டம்,

தொழில் நிறுவனங்களுக்கான மின்சார வசதி குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் மின் மோட்டார்கள் பொருத்தும் பணி , மின்சார வாரியங்கள் ஏற்படும் விபத்துக்கள் , அடிக்கடி ஏற்படும் மின்தடை ஆகியவற்றை சரி செய்வது குறித்தும் தலைமை பொறியாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

தேர்திருவிழாக்களில் அசம்பாவிதம் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு