தேர்திருவிழாக்களில் அசம்பாவிதம் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு
இனிவரும் காலங்களில் தேர் திருவிழாக்களில் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் ன இந்து அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் கோபுரம் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முதல் முறையாக வருகை தந்து கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
நடவடிக்கை எடுக்கப்படும்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடக்கும் திரு முக்குலத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை சரி செய்து விரைவில் அங்கு தெப்பத் திருவிழா நடக்க ஏற்பாடு செய்யப்படும்.
தொடர்ந்து முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பின் அடிப்படையில் குலசேகரபட்டினம் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் 108 விளக்கு பூஜை நடைபெறும் என தெரிவித்தார்.
மேலும், தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்,
இனி வரும் காலங்களில் தமிழகத்தில் நடைபெறும் தேர் திருவிழாக்களில் இது போன்ற அசம்பாவிதம் நடக்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை ஆக்கிரமித்திருக்கும் நபர்கள் யாராயினும் அவர்கள் உடனே அப்புறப்படுத்தப்பட்டு அந்த இடங்கள் சம்பந்தப்பட்ட கோவிலின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்.
மேலும் ஆதீனங்கள், மடாதிபதிகளுக்கு தமிழக அரசு உரிய மரியாதை அளித்து வருவதாகவும், அதில் ஏதும் குறைபாடு இருந்திருந்தால் இனிவரும் காலங்களில் அது சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
நபிகள் நாயகம் விவகாரம் : இந்தியாவுக்கு வங்காளதேசம் பாராட்டு