தொடர் மின் வெட்டு : சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
மின்வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மின்வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது.
கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது.
நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். தினமும் 17,100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில், 13,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.
வெளிமாநிலத்தில் இருந்து மின்சாரத்தை கொண்டுவர கடந்த ஆட்சியில் மின்பாதை அமைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். மின்வெட்டு காரணமாக விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.