மக்கள் வளர்ச்சிக்காக என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன் : முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டின் திராவிட மாடல் இந்தியாவுக்கே வெற்றி சூத்திரமாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
#Live: திருப்பத்தூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விழாப் பேருரை https://t.co/KXssacnLjd
— M.K.Stalin (@mkstalin) June 29, 2022
அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் :கடந்த வாரம் எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது அதனால் குறிப்பிட்ட தேதியில் வர முடியவில்லை தற்போது உங்களை பார்த்தவுடன் உற்சாகம் அடைந்துள்ளேன்,சொல்லப்போனால் மருந்து மாத்திரைகளை விட மக்களாகிய உங்களை சந்திக்கும் போதுதான் உற்சாகம் வருகிறது.
365 நாட்களும் விழா எடுக்க வேண்டியிருக்கும்
கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு திட்டத்திற்கு விழா எடுப்பார்கள் ,ஆனால் திமுக ஆட்சியில் பல திட்டங்களுக்கு ஒரே விழா எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறிய முதலமைச்சர். அதிமுக ஆட்சி போல விழா எடுத்தால் 365 நாட்களும் விழா எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறினார்.
மேலும், எப்போதும் தமிழகம் தான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்து வருவதாகவும் இந்திய சுதந்திர போராட்டத்தில் வேலூரில் நடந்த சிப்பாய் புரட்சி தான் முன்னோடியாக இருந்ததாக கூறினார்.
இந்தியாவிற்கே வழிகாட்டி திராவிட மாடல்
அதே சமயம் தி.மு.க தனது எல்லையினை தமிழகத்துடன் சுருக்கிக் கொண்டாலும் அவை முன்னெடுக்கும் தத்துவங்கள் இந்தியா முழுமைக்குமானது. நாடு முழுமைக்கும் திராவிட மாடல் அரசு வழிகாட்டுவதாக கூறிய முதலமைச்சர்.
சக்தியை மீறி உழைத்து வருகிறேன்
தமிழக மக்கள் வளர்ச்சிக்காக எனது உடல் சோர்வை பற்றி காண கவலைப்படாமல் என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன். அமைச்சர்களும் அதிகாரிகளும் அவ்வாறு தான் செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி இந்த பொற்கால ஆட்சியை தொடர்வோம் என்று பேசினார்.
ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் : எடப்பாடி பழனிசாமி பதில் மனு