ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் : எடப்பாடி பழனிசாமி பதில் மனு
தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் தான் , ஒற்றை தலைமைதான் வேண்டும் என ஈபிஎஸ் தரப்பு கூற .
அதெல்லாம் முடியாது இரட்டை தலைமைதான் வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பு ஒற்றை காலில் நிற்க இந்த விவாகரம் பொதுக்குழு கூட்டத்தின் போது இன்னமும் பூதாகரமன கதை நாம் அறிந்ததே.
யாருக்கு ஒற்றை தலைமை
இந்த நிலையில், அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் குறித்து முறையீடு செய்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு ஒன்று தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது :
எடப்பாடிக்குதான் ஆதரவு
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை ஓ.பன்னீர் செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்துகின்றனர்.
பெரும்பான்மை உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் பதில் மனுவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
ஓபிஎஸ் திமுகவின் பி டீமா?.. வம்பிழுத்த நிருபர் உதயநிதி சொன்ன பதில் என்ன?