எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் ஆதரவு - மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு..!

ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Jun 28, 2022 05:25 AM GMT
Report

எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒற்றை தலைமை விவகாரம்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக நியமிக்க அவரது ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜுலை 11 ஆம் தேதி மீண்டும் கூட உள்ளது.இதையடுத்து எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை குறித்து தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் ஆதரவு - மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு..! | Growing Support For Edappadi Palanisamy

இந்நிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் ஆதரவுகளை எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்து வருகின்றனர்.

பெருகும் ஆதரவு 

எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கனவே 2,432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் மேலும் 9 பேர் எடப்பாடி இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எண்ணிக்கை 68 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து எட்பபாடி பழனிசாமியின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2441 ஆக அதிகரித்துள்ளது.