அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கம்? - வெளியான தகவல் - அதிமுகவில் பரபரப்பு
ஓபிஎஸ்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடியின் பாய்ச்சலை தடுப்பதற்கு ஓபிஎஸ் டெல்லிக்கு விஜயம் செய்துவிட்டு வந்திருக்கிறார். அங்கு மோடியை சந்தித்த அவர் கட்சி விவகாரங்கள் குறித்து பேசியதாகவும், டெல்லி சரியான சிக்னல் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் நீதி கேட்டு தொண்டர்களை சந்திக்க தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
மதுரையில் சுற்றுப்பயணம்
ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரையில் சுற்றுப்பயணம் தொடங்கினார். இந்த சுற்றுப்பயணத்தில் ஓ.பி.எஸ்.க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தேனியிலிருந்து சென்னை வருகிறார் இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
இன்று நடைபெறும் நிலையில் சென்னைக்கு ஓபிஎஸ் வருவதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓரம் கட்டப்படும் ஓ.பன்னீர்செல்வம்
கடந்த சில நாட்களாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியினர் கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டிவிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க.வின் அங்கீகாரமிக்க நாளேடான 'நமது அம்மா' பத்திரிகையின் நிறுவனர் என்ற பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பி.எஸ். நீக்கம்?
இந்த பரபரப்பான உட்கட்சி விவகாரத்திற்கு இடையே அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பி.எஸ்.சை நீக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அதிமுகவினரிடைய பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.