ரொம்ப சந்தோஷப்படாதீங்க முதல்வரே உதயநிதி இருக்காருல : எச்சரிக்கை கொடுத்த சி .வி சண்முகம்
முதலமைவ்வர் ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சி.வி.சண்முகம், ரொம்ப சந்தோஷப்படாதீங்க முதல்வரே, உங்கள் மகன் உதயநிதிக்கு விரைவில் பட்டாபிஷேகம் செய்து வைப்பீர்கள்,அது நடக்கும்போது என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திருமண மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடக்கிறது.
விமர்சனம் வைத்த ஸ்டாலின்
இன்னொரு பக்கத்தில் ஒருதிருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அந்த பிரச்சனைக்கு நான் போக விரும்பவில்லை. அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை.
திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை" என முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுக்குழுவை சூசகமாக சுட்டிக்காட்டிப் பேசினார்.
சிவி.சண்முகம் பதிலடி
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்திற்கு பதில் கூறும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அதிமுகவின் நிலை கண்டு திமுக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம் என முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் தரப்பைச் சேர்ந்த சி.வி.சண்முகம், முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்து குறித்து பேசுகையில், திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்போது என்ன நடக்கிறது என நாங்களும் பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
பொய்யான வழக்குகளை வாங்குவது பாஜக தொண்டனுக்கு புதிதல்ல : பாஜக அண்ணாமலை