பொய்யான வழக்குகளை வாங்குவது பாஜக தொண்டனுக்கு புதிதல்ல : பாஜக அண்ணாமலை
பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் செல்வி மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சி சிவா மகன் கைது
தனியார் பேருந்து உரிமையாளரை மிரட்டிய புகாரில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனும் பாஜக பிரமுகரான சூர்யாவை காவல்துறை கைது செய்துள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து, தன் கார் மீது பேருந்து மோதிய சம்பவத்தில் இழப்பீடு கேட்டு பேருந்தை எடுத்துக்கொண்டு, உரிமையாளரை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது @arivalayam அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல.
— K.Annamalai (@annamalai_k) June 23, 2022
சகோதரர் @SuriyaaSivaa அவர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறது @BJP4TamilNadu.
பேருந்தின் உரிமையாளர் அளித்த புகாரில் சூர்யாவை கைது செய்து, திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்:
ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல. சகோதரர் சூர்யா அவர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறது.
எங்களுக்கான நேரம் வரும்
பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் செல்வி மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
பறையா, என நான் கூறவில்லை : விளக்கம் கொடுத்த அண்ணாமலை