அண்ணாமலை அரைவேக்காடு மாதிரி கேள்வி கேட்கிறார் : அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரைவேக்காடு தனமாக கேள்வி கேட்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உழவர் சந்தை முன்பு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் பராமரிப்பு கோட்டம் சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியை 2 கோடியே 21 லட்சம் மதிப்பில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் :
கோவை மாநகராட்சியில் இன்று ஒரு நாளில் மட்டும் 113 கோடியே 27 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், கோவையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் , தொழில் துறையின் தலைநகராக கோவைக்கு வளர்ச்சிக்காக நிதிகளை முதலமைச்சர் தந்துள்ளதாக கூறினார்.
அதே போல் , கோவை விமான நிலைய விரிவாக்கத்தை பொருத்தவரை 1132 கோடி ரூபாய் நிதிகளை முதல்வர் வழங்கியுள்ளார். விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கும் பணிகள் இரண்டு மூன்று மாதங்களில் நிறைவடையும் எனக் கூறினார்.
தொடர்ந்து அண்ணாமலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, அண்ணாமலை அரைவேக்காட்டு தனமாக கேள்வி கேட்பதாக தெரிவித்தார்.