முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குட்டி மோடியாக மாற நினைக்கிறார் - அண்ணாமலை பேச்சு..!

M K Stalin DMK BJP K. Annamalai
By Thahir Jun 27, 2022 09:39 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குட்டி மோடியாக மாற முயற்சி செய்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மக்களை பற்றி சிந்திப்பவர் பிரதமர் மோடி 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய தமிழக மாநில பாஜக தலைவர் கே. அண்ணாமலை, பிரதமர் மோடி பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குட்டி மோடியாக மாற நினைக்கிறார் - அண்ணாமலை பேச்சு..! | Cm Mk Stalin Wants To Become A Small Modi

இந்த காலகட்டத்தில் நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை மோடி செயல்படுத்தியுள்ளார். கோடிக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களால் மேம்பட்டுள்ளது. எந்த நேரமும் நரேந்திர மோடி மக்களின் நலன் குறித்தே சிந்திப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் இஸ்லாமிய,கிறிஸ்தவ சிறுபான்மை மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே திமுகவினர் பயன்படுத்தி வருவதாக கூறினார்.

இரண்டாது முறையாக அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக ஆக்க வேண்டும் என பாஜக தெரிவித்த போது, 'கலாம் என்றால் கலகம்' என்று பொருள் எனக் கூறியவர்தான் கருணாநிதி என்று பரபரப்பாக பேசினார்.

உண்மையான சமூகநீதிக்கான கட்சியாக திமுக இருந்தால், திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என்றார்.

குட்டி மோடியாக மாற முடியாது

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது என்று ஒரு பழமொழி உண்டு. அதேபோல, பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து, தானும் 'குட்டி மோடி' ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

'குட்டி மோடி' ஆக வேண்டுமெனில் அடித்தட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும். அதற்கு குடும்பத்தை மறந்து உழைக்க வேண்டும். ஆனால், திமுகவை பொறுத்தவரை 'குடும்பமே கட்சி , கட்சியே குடும்பம்' என்ற நிலைதான் உள்ளது.

திமுகவில் எது கட்சி எது குடும்பம் என்று தெரியவில்லை.  சென்னை மாநகர காவல் சங்கர் ஜிவால் 1000 கிலோ கஞ்சாவை தீயில் வீசி அழித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் சென்னை தான் கஞ்சாவின் தலைநகரமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு காய்ச்சல் - அரசு நிகழ்ச்சிகள் ரத்து!